போர் ஆயுதமாக ஊக்குவிக்கப்படும் பஞ்சம்

by Admin / 24-08-2025 01:22:36am
 போர் ஆயுதமாக ஊக்குவிக்கப்படும் பஞ்சம்

காசாவில் ஏற்பட்டிருக்கும் பஞ்சம் மனித குலத்தின் தோல்வி என்று ஐநா குறிப்பிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட ஐ.நா உணவு பாதுகாப்பு அறிக்கையில், லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் சிக்கி தவிப்பதாகவும் இது பரவலான பட்டினி, வறுமை மற்றும் தடுக்கக்கூடிய மரணங்களை குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளது. இந்த உணவு பஞ்சம் என்பது மனித உயிர் வாழ்விற்கு தேவையான அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட சரிவு என்றும் தெரிவித்துள்ளது. காசாவில் அதிகரித்து வரும் பசி தொடர்பான இறப்புகள் வேகமாக மோசமடைந்து வரும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவு நுகர்வு அளவுகள் வீழ்ச்சி அடைந்து வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் சாப்பிட எதுவும் இல்லாமல், பல நாட்களாக தவிக்கும் நிலையில் உடனடியாக முழு அளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்குவதன் தீவிர அவசரத்தை அமைப்புகள் கூட்டாக எடுத்துரைத்து வருகின்றன..இஸ்ரேல் தனது கடமைகளை மறப்பதை தொடர அனுமதிக்க முடியாது என்றும் இனி சாக்கு போக்கு சொல்லி தப்பிப்பதற்கு வழி இல்லை என்றும் நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் தொடங்கி விட்டது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.. அத்துடன் 2023 அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதலின் போதுமாஸ் மற்றும் பிற போராளிகளால் பிடிக்கப்பட்ட அனைத்து பழைய கைதிகளையும் உடனடியாக விடுவிக்கவும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. காசா நகரத்தின் மீதான தீவிர படுத்தப்பட்ட ராணுவ தாக்குதலின் அச்சுறுத்தல் மற்றும் மோதல் மேலும் அதிகரிப்பது குறித்து நிறுவனங்கள் கடுமையான கவலையை வெளிப்படுத்தி உள்ளது .பஞ்ச நிலைமையில் இருக்கும் பொது மக்களுக்கு இது மேலும் பேரழிவான நிலையை ஏற்படுத்தும் என்றும் பல மக்கள் குறிப்பாக தேவைப்பட்ட மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்கள் வெளியேற முடியாமல் போகும் சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் இறுதிக்குள் காசா பகுதி முழுவதும் 6 லட்சத்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பேரழிவு அளவிலான உணவு பாதுகாப்பின்மையை எதிர் கொள்வார்கள் என்றும் மேலும் 1.14 மில்லியன் மக்கள் நாலாம் கட்டத்தில் இருப்பார்கள் என்றும் மூன்று லட்சத்து 96 ஆயிரம் பேர் நெருக்கடியான நிலைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் வடக்கு காசாவில் நிலைமைகள் காசா நகரத்தை விட கடுமையானதாகவோ அல்லது மோசமானதாகவோ இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.

பஞ்சத்தை வகைப்படுத்தும் பொழுது தீவிர உணவு பற்றாக்குறை ,கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி தொடர்பான இறப்புக்கள் ஆகிய மூன்று முக்கியமான வரம்புகளை மீறும் போது இது தீவிரமாக தூண்டப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இஸ்ரேலின் திட்டமிட்ட தடைகளால் எல்லைகளில் உணவு குவிந்து கிடப்பதாகவும் ஒரு வளமான நிலத்தில் உணவு இருந்துவு சில 100 மீட்டர் தூரத்திற்குள் பஞ்சம்  ஏற்பட்டுள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டின் ஒரு பஞ்சம் ட்ரோன்கள் மற்றும் வரலாற்றில் மிகவும் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இது இஸ்ரேலிய தலைவர்களால் போர் ஆயுதமாக வெளிப்படையாக ஊக்குவிக்கப்படும் பஞ்சம் என்றும் குறிப்பிட்டுள்ளது

. காசாவில் உள்ள குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகவும் ஜூலை மாதத்தில் 12000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்ந்து ஆறு மடங்காக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டினியை போரின் ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதன் மூலம் மரணங்கள் அதிகரித்து வருவதின் காரணமாக இது ஒரு போர் குற்றத்திற்கு சமமானதாகவும் இந்த பஞ்சம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 போர் ஆயுதமாக ஊக்குவிக்கப்படும் பஞ்சம்
 

Tags :

Share via