மக்களவை தேர்தல்: நாளை 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் , 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு.

by Editor / 31-05-2024 10:01:48am
மக்களவை தேர்தல்: நாளை 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் , 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு.

2024 மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஜுன் 01) நடைபெறுகிறது. 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 13, பஞ்சாப்பில் 12, பீகாரில் 8, மேற்குவங்கத்தில் 9, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஒடிசாவில் 6, ஜார்கண்டில் 3, சண்டிகரில் 1 என மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி, நடிகை கங்கனா ரனாவத் போன்ற பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று (மே 30) மாலையே அரசியல் கட்சிகளின் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை முடிந்தது.நாளை (ஜூன் 01) சனிக்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையில், அன்றைய தினம் மாலையே தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் வெளியாகும். மாலை 6.30 மணிக்குப் பிறகு, முன்னணி ஊடகங்கள்/தனியார் நிறுவனங்கள் மக்களவை மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபைகளுக்கான இந்த கணிப்புகளை வெளியிடும். இந்த தேர்தலுக்கான இறுதி முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

Tags : மக்களவை தேர்தல்:

Share via