ரயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் வெண்ணிலா பி. இ பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்,இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வெண்ணிலே வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது,நேற்று தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்திற்க்கு சென்ற வெண்ணிலா திடிரென எதிரே வந்த மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்,தகவல் அறிந்து வந்த தாம்பரம் இருப்புபாதை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பல கோணங்களில் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Tags :



















