செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ., 6 வரை நீட்டிப்பு

by Staff / 20-10-2023 03:37:28pm
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ., 6 வரை நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி அல்லி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories