போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள்  தண்டனை விதித்து தீர்ப்பு.

by Editor / 06-09-2024 11:17:13pm
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள்  தண்டனை விதித்து தீர்ப்பு.

சங்கரன்கோவில்  அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுப்பிரமணியபுரம் வடக்கு காலனி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் சின்ன முத்தையா(69) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி  சுரேஷ் குமார்  குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு  ரூபாய் 5 லட்சம் வழங்கவும்  தீர்ப்பளித்தார்.  இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த சங்கரன்கோவில்  அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஶ்ரீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்தார்..

 

Tags : போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள்  தண்டனை விதித்து தீர்ப்பு

Share via
Logo