பிரதமர் மோடிக்கு எதிரான மனநிலை மக்களிடையே உருவாக வேண்டும்...சீமான்

by Staff / 29-08-2023 03:42:19pm
பிரதமர் மோடிக்கு எதிரான மனநிலை மக்களிடையே உருவாக வேண்டும்...சீமான்

பிரதமர் மோடிக்கு எதிரான மனநிலை மக்களிடையே உருவாக வேண்டும் அதற்கு இந்தியா கூட்டணி முயன்றால் வாழ்த்துக்கள் என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார் அவர் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார் நாட்டின் வளம் கொள்ளையடிக்கப்படுகிறது பாழ்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்ய முடியும் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் தருவதாக கூறினார்கள் இப்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு என்கிறார்கள் எங்கள் பெண்களின் தகுதியை நிர்ணயப்பதற்கு இவர்கள் யார் மூன்று மந்திரிகளின் ஊழல் குற்றச்சாட்டை தானாக எடுத்து விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்தை வரவேற்கிறேன் தமிழகத்தில் நிலக்கரி வளம் நெய்வேலியில் சுரண்டப்படுகிறது இது குறித்து நீதிபதி தண்டபாணி கவலை தெரிவித்ததை வரவேற்கிறேன் அதிலிருந்து தயாரிக்கும் இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள் ஆனால் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பறிக்கிறார்கள் சூரிய ஒளி காற்றாலை நீர் மின்சக்தி போன்ற இயற்கை வளங்களால் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் ஆனால் அதை தனியார் மயமாக்குகிறார்கள் அதானியின்சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு முதலீடு 4500 கோடி இதை செய்ய தமிழக அரசுக்கு நிதி இல்லையா

 

Tags :

Share via

More stories