நவ.1-ல் இருந்து பள்ளிகள் திறப்பு... 1 வகுப்பில் அதிகபட்சம் 10 மாணவர்கள்..

by Admin / 07-10-2021 12:03:59am
நவ.1-ல் இருந்து பள்ளிகள் திறப்பு... 1 வகுப்பில் அதிகபட்சம் 10 மாணவர்கள்..

கேரளாவில் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் 1 முதல் 7ம் வகுப்பு வரை ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 10 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு நிபந்தனைகளில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. அடுத்த வாரம் முதல் முதல் 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரி திறக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதியில் இருந்து பள்ளிகளையும் திறக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி வரும் ஒன்றாம் தேதியில் இருந்து, 1 முதல் 7ம் வகுப்புகள் மற்றும் 10, 12 வகுப்புக்கள் தொடங்குகின்றன.
 
8, 9, 11 வகுப்புகளுக்கு நவம்பர் 15 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. இந்த நிலையில், 1 முதல் 7 வகுப்புகளில் அதிகபட்சமாக 10 மாணவர்களையும். 8ம் வகுப்புக்கு மேல் 20 மாணவர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories