பயங்கரவாதிகள் அடுத்தடுத்து அட்டூழியம்... ஒரு மணி நேரத்தில் 3 பேர் சுட்டுக்கொலை...
காஷ்மீரில் மருந்து கடை உரிமையாளர், ஒரு தெரு உணவு விற்பனையாளர் மற்றும் ஒரு வண்டி ஓட்டுநர் என்று மூன்று பேர் தனிநபர் சம்பவங்களில் பயங்கரவாதிகளால் ஒரு மணி நேரத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன்படி ஸ்ரீநகரின் பிரபல மருந்துக் கடை உரிமையாளரும், காஷ்மீரி பண்டிட்டுமான மாக்கன் லால் பிந்துரு அவரது கடையில் வைத்து பயங்கரவாதிகளால் சுடப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் ஸ்ரீநகரின் ஹவால் பகுதியில் வெளியூரைச் சேர்ந்த சாலையோர பேல் பூரி வியாபாரி விரேந்தர் என்பவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த இரு கொலைகள் நிகழ்ந்த சில நிமிடங்களில் பந்திபூரா மாவட்டத்தில் உள்ளூர் டாக்சி நிறுத்தம் தலைவர் முகம்மது ஷபி லோன் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் நடந்த இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :













.jpg)




