2 மகன்களை எரித்துக் கொன்று தாய் தற்கொலை
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வேர்கிளம்பியை அடுத்த பூங்கோடு செங்கோடி கிராமத்தை சேர்ந்தவர் யேசுதாஸ் (வயது 52), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சீமா (38). மகன்கள் கெவின் (15), கிஷான் (7). 2 பேரும் 10-ம் வகுப்பும், 2-ம் வகுப்பும் படித்தனர். அவர்கள் 2 பேருக்கும் நரம்பு பிடிப்பு பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது சீமாவுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அவருக்கும் கணவர் யேசுதாசுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்றனர். படுக்கை அறையை உடைத்து உள்ளே சென்றவர்கள் அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைந்தனர். மகன்கள் கெவின், கிஷானுடன் சீமா படுக்கையில் தீயில் கருகிய நிலையில் கிடந்துள்ளார். இந்த சூழலில் திருவட்டார் போலீசாரும் அங்கு வந்தனர். அனைவரும் சேர்ந்து, தீயில் கருகி கிடந்த தாய்-மகன்களை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கிஷான் பரிதாபமாக இறந்தான். கெவின் மற்றும் சீமா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
Tags :



















