மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை ஒடுக்க வேண்டும் உயர்நீதிமன்றம் கருத்து

மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மதுரையில் தனியார் பள்ளி மாணவர் 12 தேர்வு எழுதியதில் முறைகேடு குறித்த வழக்கில் நீதிபதி இந்த கருத்தை தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில், இதுபோன்ற முறைகேடுகள் சமுதாயத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என கூறிய நீதிமன்றம், சிபிசிஐடி காவல்துறை இவ்வழக்கில் விசாரணை நடத்தி 6 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
Tags :