‘பணக்கொழுப்பு’ என விமர்சித்திருந்த சீமானுக்கு தவெக பதிலடி

by Staff / 12-02-2025 05:17:54pm
‘பணக்கொழுப்பு’ என விமர்சித்திருந்த சீமானுக்கு தவெக பதிலடி

தவெக விஜய்யை, பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறித்த, ‘பணக்கொழுப்பு’ என சீமான் விமர்சித்தார். இந்நிலையில், “நடைமுறை அரசியல் யதார்த்தம் சீமானுக்கு புரியவில்லை” என தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத் குமார் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், “ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள், ‘வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி’ என நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?” என்றார்.

 

Tags :

Share via