செங்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தை நடத்தாமல் வெளியேறிய திமுக நகர் மன்ற தலைவி விடாமல் விரட்டிச் சென்று ஆபாசமாக திட்டி அனுப்பிய அதிமுக கவுன்சிலர்களால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற சாதாரண கூட்டம் மன்ற தலைவர் ராமலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற கூட்டம் முறையாக நடப்பது இல்லை எனவும் மன்ற பொருட்கள் குறித்து தீர்மான புத்தகத்தில் எழுதப்படும் தீர்மானங்கள் அனைத்தும் முறையாக எழுதுவது கிடையாது, மன்றம் ஓப்புதல் இல்லாத தீர்மானங்களை மன்ற தலைவி தனக்கு தேவையான முறையில் திருத்தி எழுதி கொள்வதுடன், ஊழல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இது தொடர்பாக திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் மன்ற தலைவி முறையான பதில் அளிக்காமல் தீர்மான புத்தகத்தில் கையெழுத்து இடமாட்டோம் என்றதால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கூறி மன்ற தலைவி ராமலக்ஷ்மி கோபமாக வெளியேறினார்.
இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் மன்றத்தில் முறையான விவாதம் நடைபெற வேண்டும், கூட்டம் நடத்தப்பட வேண்டும் கவுன்சிலர் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு தனது அறையை நோக்கிச் சென்ற நகர மன்ற தலைவர் ராமலட்சுமியை விரட்டிச் சென்ற நிலையில் அவரது அரைக்கும் சென்று வாக்குவாதத்தில் ஈடுபடவே கோபம் அடைந்த திமுகவை சேர்ந்த மன்ற தலைவி ராமலட்சுமி அவரது அறையை விட்டு வெளியே நிலையில் அவரை வழிமறித்து கூட்டத்தை நடத்தி விட்டு செல்லுங்கள் என்று கவுன்சிலர்கள் அழைத்த நிலையில் கவுன்சிலர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருமையில் வாக்குவாதம் ஏற்படவே அதிமுக பாஜக வை சேர்ந்த கவுன்சிலர்களும் மாறி மாறி ஒருமையில் நாகூர் மன்ற தலைவரை நாக்கு கூசுும் அளவு பேசியதால் அவரும் பதிலுக்கு நகராட்சி அலுவலக வாயிலில் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக அவர் நகர் மன்ற அலுவலக த்தை விட்டு தனது வாகனத்தில் புறப்பட்டு சென்றார். செங்கோட்டை நகர மன்ற தலைவர் ராமலக்ஷ்மி அதிமுகவினரின் ஆதரவோடு நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் திமுகவில் முதலமைச்சர் முன்னிலையில் இணைந்ததில் இருந்து தொடர்ந்து செங்கோட்டை நகராட்சியில் பிரச்சனைகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் திமுக கவுன்சிலர்களும் அதிமுக கவுன்சிலர்களும் பாஜக கவுன்சிலர்களும் ஒரு அணியாகவும் நான்கு திமுக கவுன்சிலர்கள் ஒரு அணியாகவும் செங்கோட்டை நகர மன்றத்தில் செயல்பட்டு வருவதா இந்த பிரச்சனை உருவானது குறிப்பிடத்தக்கது கவுன்சிலர்களின் கருத்து வேறுபாடு மோதல் காரணமாக செங்கோட்டை நகரில் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வாரச்சந்தை இன்னும் திறக்கப்படாமல் கிடைக்கிறது இப்படி பல்வேறு வளர்ச்சி பணிகள் முடங்கி கிடக்கிறதால் மக்கள் தவிப்பில் உள்ளனர் கடந்த ஓராண்டில் நகர மன்ற கூட்டம் முழுமையாக நான்கு முறை மட்டுமே நடத்தப்பட்டு குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் நகராட்சி கூட்டம் முறையாக நடத்த வேண்டும் என கூறி அதிமுக கவுன்சிலர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்தனர் இந்த நிலையில் நகர மன்ற தலைவர் ராமலட்சுமி அதிமுக கவுன்சிலர் சுப்பிரமணியன் ஜெகன் முத்துப்பாண்டி மற்றும் பாஜக கவுன்சிலர் ராம்குமார் ஆகியோர் மீது செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
Tags :