செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு வந்த சிக்கல்

by Editor / 12-02-2025 04:59:11pm
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு வந்த சிக்கல்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வித்யாகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் ஜாமினில் உள்ளதால் சாட்சியங்கள் பயப்படுகின்றனர் என அமலாக்கத்துறை வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர வேண்டுமா? என மாநில அரசிடம் கேட்டு தெரிவியுங்கள். அவர் அமைச்சராக இருப்பதால் சாட்சியங்கள் சொல்பவர்கள் பயப்படுகிறார்கள் எனக்கூறி வழக்கை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Tags :

Share via