ஆக்சிஜன் சிலிண்டரில் தீ விபத்து.. நோயாளி துடிதுடித்து பலி

by Staff / 14-07-2023 12:08:57pm
ஆக்சிஜன் சிலிண்டரில் தீ விபத்து.. நோயாளி துடிதுடித்து பலி

ராஜஸ்தானில் ஆக்சிஜன் சிலிண்டர் தீப்பிடித்து நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைபவ் சர்மா (23) என்ற இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்றூ மருத்துவர்கள் வைபவ் சர்மாவுக்கு டைரக்ட் கரண்ட் கார்டியோவர்ஷன் ஷாக் சிகிச்சை அளித்தனர். இதனையடுத்து, சிறிது நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தீப்பிடித்ததாகவும், இதனால் வைபவ் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், காசநோயால் வைபவ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories