நடத்தையில் சந்தேகம்.. மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை

சென்னை வியாசர்பாடி அருகே கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் விரக்தியடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டார். ரம்ஜான் பீவி என்ற பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமான நிலையில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஆண்டனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மனைவி நடத்தையில் கணவர் சந்தேகப்பட்ட நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது தாய் வீட்டிற்குச் சென்ற பீவி, 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
Tags :