மூளை வறுவல் செய்முறை
தேவை
மூளை – 2
சின்ன வெங்காயம் – 50 கிராம்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மிளகுதூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
2 மூளைகளை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். 50 கிராம் சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக்கிக்கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் 8 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் 1/2 தேக்கரண்டி சீரகம், நறுக்கிய வெங்காயம் இவற்றைப்போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, இத்துடன் 1 தேக்கரண்டி மிளகுத்தூள் 2 தேக்கரண்டி மல்லித்தூள், சிறிது மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்க்கவும். கொதித்தபின், மூளைத்துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து, மூளை நன்கு வதங்கிய பின் இறக்கவும்
Tags :