ஃபிங்கர் ஃபிஷ் எப்படி செய்வது ?

by Admin / 17-08-2021 11:04:08am
ஃபிங்கர் ஃபிஷ் எப்படி செய்வது ?

தேவை

வஞ்சர மீன் – 1/2 கிலோ(முள், தோல் நீக்கி விரல் சைஸ்க்கு வெட்டி வாங்கவும்)

இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன

சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்

முட்டை – 2

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க

உப்பு – தேவையான அளவு

செய்முறை

மீனை சுத்தம் செய்து மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மீனை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.

 

Tags :

Share via