13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

by Editor / 23-11-2023 07:23:51am
13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.7 மாவட்ட பள்ளிகளுக்கும்,சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை.

 

Tags : பள்ளிகளுக்கும்,சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Share via

More stories