அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

by Staff / 06-06-2024 03:06:00pm
அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மதியம் 2.30 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி செல்ல உள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, டெல்லியில் முதல்முறையாக அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை சந்திக்க இருக்கும் அண்ணாமலை தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, கட்சி தலைமையிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via

More stories