விநாயகர் சதுர்த்தி தினம்

முழுமுதற் கடவுள் என்று போற்றப்பட்டு வழிபடப்படுகின்ற விநாயகப் பெருமானே சிறப்பு பூஜையுடன் வழிபடக்கூடிய விநாயகர் சதுர்த்தி தினம் .. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீட்டில் வாங்கி வைத்து வழிபாடு செய்யும் முறை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வை பிராட்டி பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் நான் உனக்கு தருவேன் தொங்க கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தான் என்று போற்றி வழிபட்ட விநாயகர் பெருமாளுக்கு அவல், பொரிகடலை, தேங்காய், பழம் மோதகம் ,கொழுக்கட்டை ,பால் பாயாசம், பூம்பருப்பு ,சுண்டல் உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு நிகழ்த்துவர்... விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வீட்டில் வழிபடுவதற்குகாலை 9.00 -10.30 லிருந்தும் மாலை 6:00 மணியிலிருந்து பூஜை செய்யலாம் என்றும் சொல்லப்படுகின்றது.
Tags :