தென்காசி மாவட்டத்தில் கனமழை-குற்றால அருவியில் நீர்வரத்து மக்கள் மகிழ்ச்சி.
தென்காசி மாவட்டத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் திடீரென தென்காசி மாவட்ட மாலை 6 மணி முதல் வானம் கருத்து சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது பல்வேறு பகுதிகளில் மரங்கள் ஒடிந்து விழுந்து விடுமோ என்கின்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது அந்த அளவுக்கு தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது இதன் தொடர்ச்சியாக இடி மின்னலுடன் கூடிய கனமழை தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் சிவகிரி வாசுதேவநல்லூர் புளியங்குடி கடையநல்லூர் காசி தர்மம் சொக்கம்பட்டி இடைகால் ஆய்க்குடி சுரண்டை தென்காசி செங்கோட்டை குற்றாலம் புலியரை பண்பொழி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதை தொடர்ந்து மின்சாரம் தடைபட்டுள்ளது மேலும் சில பகுதிகளில் மரங்கள் மின்வயிர்கள் மீது சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Tags :