இனி சுங்கச்சாவடிகள் இருக்காது.. மத்திய அமைச்சர்

by Staff / 04-02-2025 02:35:38pm
இனி சுங்கச்சாவடிகள் இருக்காது.. மத்திய அமைச்சர்

தேசிய நெடுஞ்சாலைகளில் இல் ஒரே மாதிரியான சுங்கக் கொள்கையை அமல்படுத்த உள்ளதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், சேட்டிலைட் உதவியுடன் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறிய அவர், இதன் மூலம் சுங்கச் சாவடிகளுக்கு வேலை இருக்காது என தெரிவித்துள்ளார். மேலும் சாலையின் தரம் குறித்து வாகன ஓட்டிகள் கூறும் புகார்களை பரிசீலித்து, உடனே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via