திருப்பதிக்கு நாளைமுதல் சிறப்பு பேருந்து இயக்கம்.

by Editor / 12-10-2023 09:44:29pm
திருப்பதிக்கு நாளைமுதல் சிறப்பு பேருந்து இயக்கம்.

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு (13.10.23)நாளை முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்புப் பேருந்து இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, 2 பிரம்மோற்சவம் நடைபெறுவதால் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, காரைக்குடி மற்றும் புதுவையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. டிக்கெட் முன்பதிவுக்கு www.tnstc.in இணையதளத்தை பயன்படுத்தவும்என போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : திருப்பதிக்கு நாளைமுதல் சிறப்பு பேருந்து இயக்கம்.

Share via