தீபாவளி பலகாரம்  அனுமதியின்றி மண்டபங்களில் செய்யக்கூடாது: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

by Editor / 04-11-2023 08:48:31pm
தீபாவளி பலகாரம்  அனுமதியின்றி மண்டபங்களில் செய்யக்கூடாது: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை


 தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் இனிப்புகள் தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார மற்றும் எச்சரிக்கை விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை முன்னெடுத்து வருகிறது.

இதையொட்டி, சென்னை எழும்பூரில் இனிப்பு, கார தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரிகள் சதீஷ்குமார் மற்றும் என்.ராஜா ஆகியோர் அறிவுரைகளை வழங்கினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘உணவு பாதுகாப்பு துறையிடம் உரிய அனுமதி பெற்று பாதுகாப்பு வழிமுறைகளுடன் இனிப்புகள் தயாரிக்கலாம். ஆனால் சிலர் மண்டபங்களை வாடகைக்கு பிடித்து சீசனுக்காக ஆர்டர் எடுத்து இனிப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக அறிகிறோம். அவர்கள் தங்கள் விவரங்களை கொடுத்து தற்காலிக உரிமம் பெறலாம். அதை விடுத்து பாதுகாப்பின்றி, சுகாதாரமின்றி இனிப்பு, கார வகைகள் தயாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். பொதுமக்களும் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்’ என்றனர்.


 

 

Tags : தீபாவளி பலகாரம்  அனுமதியின்றி மண்டபங்களில் செய்யக்கூடாது: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

Share via