800 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

by Admin / 25-02-2022 01:00:27pm
 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவின் படைகள் உக்ரைனை நேற்று தாக்க தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் குண்டு மழை பொழிந்தது. 

உக்ரைனும் தாக்குதலால் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் படைவீரர்கள், பொதுமக்கள் என 100 க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 
தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக போர் நீடித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் சார்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் இன்று காலை 3 மணியளவில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டதாகவும், ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories