20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஆயுதப்படை டிஜிபியாக இருந்தடேவிட்சன் தேவாசீர்வாதம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கூடுதலாக ஆயுதப்படை டிஜிபி யை பொறுப்பையும் கவனிப்பார். ஆவடி காவல்கூடுதல் ஆணையராக இருந்த பவானிசரி டிஜிபி அலுவலக ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். ரயில்வே ஐஜியாக இருந்த பாபு டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன் சென்னை ஊர் காவல் படை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயுதப்படை டிஐஜி யாக இருந்த விஜயலட்சுமி திருச்சி ஆயுதப்படை டிஐஜி யாக மாற்றப்பட்டுள்ளார். கோவை டிஐஜி யாக இருந்த சசி மோகன் திண்டுக்கல் சாரதி யாக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் டிஏஜியாக இருந்த சாமிநாதன் கோவை டி.ஹஜியாக மாற்றப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐமன் ஜமால், ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் சிபின் மாற்றப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிர்வாக ரீதியாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Tags :



















