முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரி கடிதம்

by Admin / 18-12-2023 04:41:27pm
 முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரி கடிதம்

 தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரி கடிதம்

 இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த  மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கூறவும் தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதே கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும் நாளை 19. 12 .2023 புது டெல்லியில் மாண்புமிகு  இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்திக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் நேரம் கோரி கடிதம் எழுதி உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via