அறிவாலயத்தின் தூசியை கூட அசைக்க முடியாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"கலைஞரால் உருவாக்கப்பட்ட திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், உடன்பிறப்புகளின் உழைப்பு எனும் அடித்தளத்தில் இன்றளவும் வலிமையாகத் திகழ்கிறது. கலைஞரின் சிந்தனையிலும் செயலிலும் உருவான திமுக-வின் கற்கோட்டையான அறிவாலயத்திலிருந்து செங்கல்லை உருவலாம் எனக் கனவு காண்பவர்கள் தரையில் விழுந்து தலையில் அடிபட்டபின், கனவு கலைந்து விழித்துக் கொள்ளலாமே தவிர, அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tags :