மாநகராட்சியின் அலட்சியத்தா மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் பலி.
சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் பலியான சம்பவத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை சூளைமேட்டில் தீபா என்பவர் வடிகாலில் விழுந்து நேற்று உயிரிழந்தார். தலையில் அடிபட்டு உயிரிழந்திருப்பது சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். மாநகராட்சியின் அலட்சியத்தால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
Tags : மாநகராட்சியின் அலட்சியத்தா மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் பலி.



















