கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய துடிப்பதா பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி

by Staff / 26-10-2023 02:34:38pm
கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய துடிப்பதா  பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி

ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய துடிப்பதா? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் நாளை சென்னை வருகைதர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல் வீசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல் துறையே தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம் நான்கு பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குண்டு வைத்து அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளை, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய திமுக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கி சீர்குலைந்துள்ளது. கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்தால், அதனால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via