மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் அதிகாரிகள் விரைவில் நியமனம் – அமைச்சர் எ.வ.வேலு

by Editor / 23-07-2021 06:17:55pm
மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் அதிகாரிகள் விரைவில் நியமனம் – அமைச்சர் எ.வ.வேலு


நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை,பொதுப் பணிகள் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் நெடுஞ்சாலை துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் , நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் பகுதியில் நடைபெற்று வரும் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை பணிகள் குறித்தும் தேவைப்படும் பணிகள் குறித்தும் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து ஐந்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பொது பணித்துறை அமைச்சர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த கேட்டறிந்து தோடு நடைபெற்றுவரும் பணிகளில் ஏற்படும் சிக்கல்கள் அதனை சரிசெய்யும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். கால அவகாசம் முடிந்தும் நடந்து வரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 2000 கிமீ கிராம சாலைகள் மாநில நெடுஞ்சாலை தரத்துக்கு பணிகள் மேற்கொள்ள  உள்ளது , தென்காசி பகுதியில் 6 கிமீ அம்பாசமுத்திரம் பகுதியில் 6 கிமீ,சங்கரன்கோவில் பகுதியில் 7 கிமீ நகர்ப்புற புறவழி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் நகர்பகுதி புறவழி சாலைகளை அமைக்க அரசு தனிகவனம் செலுத்திவருகிறது.

தற்போது உள்ள நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு தொழிற்சாலை சி.எஸ்.ஆர் பண்டுகளை உபயோகபடுத்தி நெடுஞ்சாலைகளில் இருபுறமும் உள்ள மரங்களை பரமரிப்பு மற்றும் நடவு செய்யும் பணிகளில் ஈடுபட தொழில்துறை அமைச்சர் மற்றும்  அதிகாரிகளிடம் பேசப்பட்டுள்ளது. நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டத்தில் மொத்தமாக 819.13 கோடி செலவில் நெடுஞ்சாலை பணிகள் நடந்துவருவதாகவும்

பல்வேறு நாடுகளிலிருந்து வரும் சர்வதேச மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை முற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்கு பாலம் அமைக்க முதற்கட்ட பணிகள் நடந்துவருகிறது..

தனிமனித பொருளாதரம் முன்னேற நெடுஞ்சாலைகள் மிகமுக்கியமாக திகழ்கிறது.நெடுஞ்சாலை துறைக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது நெடுஞ்சாலை துறைகளின் பணிகளை விரைவு படுத்தி மேற்கொள்ள தமிழகத்தை 5 மண்டல பகுதிகளாக பிரித்து ஒரு மண்டலத்திற்கு ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் அதற்கான அரசாணையை முதலமைச்சர் வெளியிடுவார் என தெரிவித்தார்

 

Tags :

Share via