முன்னாள் அமைச்சர் மணிகண்டன்: ரகசிய இடத்தில் விசாரணை

by Editor / 20-06-2021 12:56:03pm
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்: ரகசிய இடத்தில் விசாரணை

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் குற்றச்சாட்டு கூறி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்த நிலையில், இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வந்தது. நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் மீது சாந்தினி புகார் அளித்துள்ளார். நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.இதனை அடுத்து மணிகண்டன் முன்ஜாமீன் பெற சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.தேடப்பட்டு வந்த மணிகண்டனை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக  தகவல்கள் வெளிவந்துள்ளன. 

 

Tags :

Share via

More stories

Logo