ஒன்றிய அரசு கொங்குநாடு என குறிப்பிட்டதால் பரபரப்பு
விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் இடம்பெற்றார். இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட எல்.முருகனின் சுயவிபரப் பக்கத்தில், எல். முருகன், கொங்கு நாடு, தமிழ்நாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகத்தின் ஒரு பகுதியை கொங்குநாடு என மத்திய அரசே குறிப்பிட்டிருந்ததால், தமிழகத்தை பிரித்து புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா..? என்ற விவாதம் எழுந்தது. ஒருவேளை மாநிலம் பிரிக்கப்பட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளும் மாநிலத்தின் எல்லைப் பரப்பு சுருங்கிவிடும். மாநிலங்களை நிர்வாகக் காரணம் காட்டி பிரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதால், ஒன்றிய அரசு எனக் கூறி வந்த ஆளும் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு என்று அழைக்கும் திமுகவுக்கு பதிலடி கொடுக்கவே கொங்குநாடு என மத்திய அரசு குறிப்பிட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறியிருந்தாலும், மத்திய அரசின் இந்த அணுகுமுறை அதிரடியாக இருப்பதாக பாஜகவினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், சமூகவலைதளமான டுவிட்டரில் கொங்குநாடு என்னும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
Tags :



















