சேலத்தில்போலீஸை மிரட்டிய இந்து முன்னணி பிரமுகர் கைது

by Editor / 27-06-2021 10:55:13am
சேலத்தில்போலீஸை மிரட்டிய இந்து முன்னணி பிரமுகர் கைது

சேலத்தில்கொண்டலாம்பட்டி சோதனைச் சாவடியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு போலீஸார் ரூ.200 அபராதம் விதித்தனர்.அதன்பிறகு சிறிது நேரத்தில் அங்கு வந்த சூரமங்கலம் பகுதி இந்து முன்னணி பொறுப்பாளர் செல்லபாண்டியன், அபராதம் செலுத்திய இளைஞருக்கு ஆதரவாக பேசியதோடு, போலீஸாரை மிரட்டினார். அவர் மிரட்டும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.'

டூட்டி போட்டா சும்மா வந்து உட்கார்ந்துட்டு போகணும் , வழக்கு போடக்கூடாது . கொரோனாவில் இருந்து நீங்க தான் காப்பாத்த போறீங்களா ' எனக் கூறி போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தும் பேசியது வீடியோவில் பதிவாகி இருந்தது.இதையடுத்து, செல்லபாண்டியன் மீது, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத உணர்வை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில், இந்து முன்னணியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கி இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஸ்குமார் அறிவித்துள்ளார். செல்லபாண்டியனை போலீஸார் தேடி வந்த நிலையில் திருப்பூரில் வைத்து கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo