தேர்வில் தோல்வி.. மேலும் 3 மாணவர்கள் தற்கொலை

by Editor / 24-04-2025 04:22:34pm
தேர்வில் தோல்வி.. மேலும் 3 மாணவர்கள் தற்கொலை

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தில், பண்டிரி அஸ்விதா (17) என்ற மாணவி இடைநிலைப் பள்ளியில் பயின்று வந்தார். இவர் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், காமரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா (17), பூபாலப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஜடி சஞ்சனா (16) ஆகியோரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். நேற்றைய (ஏப்.23) தினம் இதேபோல், தேர்வில் தோல்வியடைந்ததால் 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

 

Tags :

Share via