தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்பு

by Staff / 07-12-2023 11:36:15am
தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்பு

தெலுங்கானாவில் காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுத்து ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் மாநில தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி. இவர் இன்று ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்கிறார். தலைமைப் பதவி தொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், ரேவந்த் டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1.04 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories