செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்: சிறைக்கு மாற்றம்

by Staff / 07-12-2023 11:38:06am
செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்: சிறைக்கு மாற்றம்

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் நவம்பர் 15ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம், குடல், நரம்பியல் உள்பட பல பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்கேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், அவர்
சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo