பிரிட்டன் பிரதமராகிறார்.இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷி சுனக்

by Writer / 24-10-2022 07:09:03pm
பிரிட்டன் பிரதமராகிறார்.இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷி சுனக்


பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் தம் பதவியை ராஜினானா செய்ததை தொடர்ந்து மீண்டும் பிரதமர் பதவிக்குப்போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார்,ரிஷி சுனக்.ஆனால்,முன்னாள் பிரதமர் போரிஸி ஜான்சன் மீண்டும் பிரதமராக போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். அதனால் ,கடுமையான போட்டி நிகழும் என்கிற எண்ணம் உருவாகியிருந்தநிலையில்,போரிஸ் போட்டியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்ததை அடுத்து கன்சர்வேட்டி கட்சியினர் எடுத்த முடிவின்படி ரிஷி சுனக்கை பிரதமராகத்தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராக முதல்முறையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பஞ்சாப் மாநிலத்தைபூர்வீகமாக  கொண்டவர்.அவரது பெற்றோர் வேலைகாரணமாக கென்யா சென்று பின்பு பிரிட்டனில் குடியேறியவர்.ரிஷிசுனக் பிறந்து வளர்ந்தது .,படித்தது அனைத்தும் பிரிட்டனில்தான் .இவருடன் பிறந்தவர்கள் இரண்டுபேர்.திருமணம்செய்தது இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள்அக்சதா மூர்த்தியை.....

 

Tags :

Share via