by Staff /
13-07-2023
04:43:53pm
கோவை பாப்பநாயக்கன்பாளையம் அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்பன் என்பவரின் மகன், 52 வயதான ரவிச்சந்திரன், வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார் இவருக்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்து வந்தது இதன் காரணமாக கல்லீரலில் இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது இதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக ரவிச்சந்திரனுக்கு கடுமையான வயிற்று வலி இருந்து வந்தது, நேற்று அவரது மனைவி சரஸ்வதி காலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றார் மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அவர் கதவை வெகுநேரமாக தட்டியும் ரவிச்சந்திரன் கதவை திறக்கவில்லை. உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சரஸ்வதி கதவை உடைத்து உள்ளே சென்றார் அப்போது ரவிச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இது பற்றி தகவல் தெரிந்த பந்தயசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
Share via