குற்றாலம் பகுதிகளில் ஏழு இடங்களில் திருடிய பரோட்டா கடை உரிமையாளர் கைது.

by Editor / 06-10-2023 10:03:20pm
குற்றாலம் பகுதிகளில் ஏழு இடங்களில் திருடிய பரோட்டா கடை உரிமையாளர் கைது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மற்றும் காசிமேஜர் புரம் பகுதியிலும் பூட்டிய வீடுகளில் பூட்டைஉடைத்து ஏழு இடங்களில் தொடர் திருட்டுக்கள் நடந்து வந்தன. இதன் தொடர்ச்சியாக குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர்.இந்த நிலையில் குற்றாலம் பகுதியில் பரோட்டா கடை நடத்தி வரும் காசி மேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி குமார் என்ற நபரை போலீசார் கண்காணித்ததில் அவர் அந்தப் பகுதியில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக அவரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் குற்றாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டுக் கலில்  ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 33 பவுன் தங்க நகைகள் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் இன்று குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்: அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
 குற்றாலம் பகுதியில் 116 கிராம் தங்க பொருட்கள் திருடு போனதாக ஒரு புகார் வந்ததைத் தொடர்ந்து குற்றாலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் குற்றாலம் பகுதியில் பரோட்டா கடை நடத்தி வரும் காசி மேஜர் புரத்தைச் சார்ந்த மணிகண்டன் என்பவரது மகன் திருப்பதி குமார் என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் மேலும் ஆறு இடங்களில் அவர் நகைகள் திருடியது கண்டறியப்பட்டது. அதில் 263 கிராம் (33 பவுன்) தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றவாளி காவல்துறையின் கவனத்திற்கு வராத குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. என்றும் தனிப்படையினரின் முயற்சி காரணமாக பல்வேறு வழக்குகள் தொடர்புடைய இந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் குற்றாலம் காவல் நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களில் குற்றாலம் சீசன் காலங்களில் திருடு போன நகைகள் குறித்து வரப்பெற்ற  17 வழக்குகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது ஏழு வழக்குகள் என மொத்தம் 24 திருட்டு வழக்குகளில் பொருட்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுக்க முழுக்க தனிப்படை போலீசாரும், குற்றாலம் காவல் துறையினரும் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளரும் முழு முயற்சியெடுத்ததின் காரணமாக இந்த சம்பவத்தின் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.என்றும் தெரிவித்தார் மேலும் அவர் தெரிவிக்கும் பொழுது மாவட்ட முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதின் காரணமாக மூன்று வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் தென்காசி மாவட்டத்தில் பைக் ரேசிங் ஈடுபடும் நபர்கள் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பைக் ரேசிங் குறித்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags : குற்றாலம் பகுதிகளில் ஏழு இடங்களில் திருடிய பரோட்டா கடை உரிமையாளர் கைது

Share via