இந்தியா உள்பட 9 நாடுகளில் பரவியுள்ள டெல்டா

by Editor / 23-06-2021 08:35:05am
இந்தியா உள்பட 9 நாடுகளில் பரவியுள்ள டெல்டா

இந்தியா உள்பட 9 நாடுகளில் பரவியுள்ள மாறுபாடு கொண்ட கொரோனா டெல்டா பிளஸ் வைரசால் நாட்டில் இதுவரை 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாறுபாடு கொண்ட டெல்டா வைரஸ், இந்தியா உள்பட 80 நாடுகளில் பரவியுள்ளது. இதில், டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, போர்ச்சுக்கல் சுவிட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாளம், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய 8 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் இந்தியாவில் 22 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்ப்டடுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கக் கூடிய வகையில் உள்ளது. எனவே, டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ள இடங்களில் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via