2 குழந்தைகளின் தாயை பலாத்காரம் செய்த போலீஸ்....போக்சோ வழக்கில் போலீசார் கைது

by Staff / 20-11-2023 01:06:02pm
2 குழந்தைகளின் தாயை பலாத்காரம் செய்த  போலீஸ்....போக்சோ வழக்கில் போலீசார் கைது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சிறுமியை போலீஸ் எஸ்எஸ்ஐ ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளுக்கு தாயான 17 வயது சிறுமிக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்க சென்ற சிறுமியை ஏரியூர் எஸ்எஸ்ஐ சகாதேவன் (55) மிரட்டி நினைத்த நேரமெல்லாம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமின்றி குழந்தை திருமணம் செய்தது குறித்து சிறுமியின் கணவர் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo