RCB நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்

பெங்களூரு: RCB பாராட்டு விழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், RCB நிர்வாகிகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான நிக்கோல் சோசலே, சுனில் மேத்யூ, கிரண், சுமந்த் ஆகியோர் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் ஜாமீனுக்காக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது அரசு முழுமையான விசாரணை செய்யாமல் கைது செய்ததாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் 4 பேருக்கும் நீதிமன்றம் இடைக்கால ஜாமீனை வழங்கியுள்ளது.
Tags :