அரசு வாகனத்தில் ஏறிச் சென்ற பாஜக மாவட்ட தலைவரால் பரபரப்பு.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனியார் நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தென்காசி மாவட்டத்தில் இன்று வருகை தந்தார் அப்பொழுது தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டு விட்டு அவர் ஆய்க்குடியில் உள்ள அமர் சேவா சங்கத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற அப்பொழுது அரசு வாகனம் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது அந்த அரசு வாகனத்தில் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் ஆனந்தன் ஐயா சாமி முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு சென்றது அதிகாரிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஒரு அரசியல் கட்சி சார்ந்த பிரமுகர் அரசு வாகனத்தில் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு தனியாக சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Tags : அரசு வாகனத்தில் ஏறிச் சென்ற பாஜக மாவட்ட தலைவரால் பரபரப்பு.



















