திமுக எம்.பி.க்களுக்கு தலைமை கிடுக்கிப்பிடி.
தமிழ்நாட்டிலுள்ள 40 நாடாளுமன்றத்தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக எம்,பி.க்களில் பலர் இன்னும் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு முழுமையாக நன்றி கூட சொல்லாமல் உள்ளதாக திமுக தலைமைக்கு புகார்கள் சென்றதாக கூறப்ப்டுகிறது.இதனைத்தொடர்ந்து சட்டமன்றத்தேர்தல் நெருங்கிவருவதால் எம்.பிக்கள் மேலுள்ள அதிருப்தியால் வாக்குகள் திசைமாறிவிடக்குதுடாது என்பதற்காக வாரத்தின் 4 நாட்கள் MPக்கள் தொகுதியில் தங்கியிருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப் 23) MPக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, "15 நாட்களுக்கு ஒருமுறை பணியாற்றியது தொடர்பாக தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்காக உழைத்த MLAக்களுக்கு நீங்கள் உழைக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.
Tags : திமுக எம்.பி.க்களுக்கு தலைமை கிடுக்கிப்பிடி.



















