பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து: 2 பேர் பலி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி பகுதியில் சரவணன் என்பவற்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்த குடோனில் இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் வேலை செய்துகொண்டிருந்த பழனியம்மாள்(65), முனியம்மாள்(50) ஆகிய இருவரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த சிவசக்தி என்ற பெண் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :