அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் - ஓபிஎஸ் தரப்பு

by Staff / 30-11-2023 02:10:31pm
அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் - ஓபிஎஸ் தரப்பு

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வரம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியினர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக, ஒ.பி.எஸ்-க்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில், உயர் நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via