சிதம்பர நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும் 27. 12. 2023 புதன்கிழமை அன்று கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை
சிதம்பர நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்று விழா தொடங்கியது .உலகப் புகழ் பெற்ற ஸ்தலமான சிதம்பர நடராஜர்- சிவகாமி அம்மாள் சமேத திருக்கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவிற்கான கொடியேற்றம் நேற்று காலை 6 .15 கோவில் உற்சவ கொடி மரத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் வாகன உலாவும் நடைபெறும். 22 ஆம் தேதி கோபுர தெருவடைச்சான் உற்சவம் 26 ஆம் தேதி தேரோட்டமும் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் 27-ஆம் தேதி நடைபெறும். அன்று அதிகாலை 2 மணியில் இருந்து 6 மணி வரை மகா அபிஷேகம் , திரு ஆபரண அலங்காரமும் நடைபெறும்.மதியம் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறும் .28ஆம் தேதி முத்து பல்லக்கில் சுவாமி வீதி உலாவுடன் ஆருத்ரா தரிசன விழா நிறைவேறும். ஆருத்ரா தரிசன விழாவை கோவில் தீட்சிதர்கள்செய்து வருகிறார்கள்.
ஆருத்ரா தரிசனம் நடைபெறும் 27. 12. 2023 புதன்கிழமை அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.: விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 06.01. 2024 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
Tags :