வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க10 கிலோ மீட்டர் சூரிய மின்வேலி.  

by Editor / 21-03-2025 12:12:02am
வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க10 கிலோ மீட்டர் சூரிய மின்வேலி.  

அம்பாசமுத்திரம்  களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், துணை இயக்குநர்/ வன உயிரின காப்பாளர்வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வன எல்லையை ஒட்டியுள்ள விவசாய நிலப்பகுதிகளில், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு, வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சூரிய மின்வேலி அமைப்பது தொடர்பாக அரசின் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது என்பது விவசாய பொது மக்களுக்கு தெரிவித்து கொள்ளப்படுகிறது. 

மேலும், மேற்படி சுமார் 10 கிலோ மீட்டர் சூரிய மின்வேலி  அமைப்பதற்கான  இடங்களை கண்டறிய வனப்பணியாளர்கள் மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், விரைவில் சூரிய மின்வேலி அமைப்பது தொடர்பான பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு, அதன் செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்பதும் விவசாய பெருங்குடி மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

Tags : வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க10 கிலோ மீட்டர் சூரிய மின்வேலி.  

Share via