சகா மாணவிகளின் கேலி கிண்டலால் திருமணமான கல்லூரி மாணவி தற்கொலை.

சென்னை ஆவடி ஓட்டுநர் காலனி தெருவை சேர்ந்த அகிலன் என்பவருக்கும் வியாசர்பாடியை சேர்ந்த அவரது உறவினர் பெண்ணான ரோனிஷா என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு கல்லூரிக்கு சென்ற ரோனிஷாவை சக தோழிகள் கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த ரோனிஷா இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.உடலைக் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஆவடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த சம்பவம் அந்தப்பகுதியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Tags :